Understanding the 5C’s of Cinematography – Workshop
Understanding the 5C’s of Cinematography – A Workshop in Chennai on 19.01.19 – Saturday.
எழுத்திலிருக்கும் கதையை அதன் சுவாரசியம் குறையாமல் உணர்வுப் பூர்வமாக காட்சிப்படுத்துவதுதான் திரைப்பட உருவாக்கத்திலிருக்கும் ஆகப்பெரிய சவால். ஒரு பூமாலை கட்டுவது போல, ஒவ்வொரு ஷாட்டாக கோர்க்க வேண்டும். கோர்க்கப்பட்ட நேர்த்தியைப் பொருத்தே அது வடிவம் பெறுகிறது.
ஒட்டுமொத்த சினிமாவை.. காட்சிகளாகவும், காட்சிகளைத் தனித்தனி ஷாட்டுகளாகவும் பிரித்தே படமாக்க வேண்டும். அப்படி பிரித்துப் படமாக்க பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன.
ஒரு காட்சியை எத்தனை ஷாட்டுகளாக பிரிக்கிறோம்..?
அந்த ஷாட் என்னவகையானது?
அந்த ஷாட்டை உருவாக்க எந்த லென்ஸை பயன்படுத்துகிறோம்.?
ஒரு ஷாட்டின் நீளம் எத்தகையது.?
ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்குமான உறவை எப்படி கட்டமைக்கப்போகிறோம்..?
அதை எப்படி இணைக்கப் போகிறோம்..?
Wide Angle Shot -இலிருந்து Close-Up Shot-வரைக்குமான பல்வேறு வகையான ஷாட்டுகளை எப்படி நெருடாமல் வரிசைப்படுத்துவது.?
..என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதற்கானப் பதில்களை கண்டடைவதும், அதை செயல்படுத்துவதும்தான் திரைப்படமென்னும் கலையின் ஆதார செயல்பாடு.
இக்கேள்விகளுக்கான பதில்களை ‘Joseph V. Mascelli’ என்னும் இயக்குநர் / ஒளிப்பதிவாளர் ‘The Five C’s of Cinematography’ என்னும் தன்னுடைய புத்தகத்தில் விவரிக்கிறார்.
திரைப்பட ஆக்கம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆதாரமான நூல்களில் ஒன்று இது. 250 பக்கம் கொண்ட இப்புத்தகத்தை முழுமையாக படித்து புரிந்துகொள்வது என்பது ஒரு பெரும் இலக்கு.
Camera Angles, Composition, Cutting, Continuity, Close-ups என்பவைதான் அந்த 5C-க்கள். இதன் ஒவ்வொரு பிரிவிலும் பழகுவதற்கு பல்வேறு நுணுக்கங்கள் இருக்கின்றன. இவற்றைப்பற்றித்தான் இப்பயிற்சி வகுப்பில் பார்க்கப் போகிறோம். ஆர்வம் கொண்ட நண்பர்கள் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.